ஒரு ரிஷி நெடுநேரம் தண்ணீரில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருந்தார் இதை அறிந்த துர்வாச முனிவர் அவரைக் காண வந்தார். ஆனால் ரிஷி தவத்திலிருந்து எழாததால் கோபம் கொண்ட துர்வாசர், அவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சபித்தார். மண்டூகமாக மாறிய ரிஷி இத்தலத்திலேயே திருமாலை நினைந்து தவத்தைத் தொடர்ந்தார். திருமாலும் காட்சி தந்து ரிஷியின் சாபவிமோசனம் அளித்தார்.
மூலவர் வடிவழகிய நம்பி என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் ஸுந்தரராஜன். தாயார் அழகியவல்லி நாச்சியார் என்று வணங்கப்படுகின்றார். பிரம்மா, வால்மீகி, மண்டூக முனிவர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமழிசையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|